பாரத் பருவநிலை கண்காணிப்புக் கட்டமைப்பின் கீழ் நீண்டகால கண்காணிப்பு நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

புனேயில் உள்ள  இந்திய வெப்பமண்டல ஆய்வு மையம், நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இடையே இம்மாதம் 18-ம்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. பருவநிலை மாற்றம், வானிலை அளவீடுகள், பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம், குறுகிய கால பருவநிலை காரணிகள், மண்ணின் ஈரப்பதம் போன்ற பருவநிலை பாதிப்புகள் தொடர்பான நீண்டகால கண்காணிப்புக் குறித்த ஆராய்ச்சியை இணைந்து மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

பாரத் பருவநிலை கண்காணிப்புக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக தேவஸ்தலில் உள்ள ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பருவநிலை கண்காணிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ள தேவஸ்தல் பகுதியில் உள்ள இந்த நிறுவன வளாகத்தில் மேம்பட்ட வளிமண்டல கண்காணிப்புகளுக்கு ஏற்ப தனித்துவ சூழலை இந்த அமைப்பு வழங்குகிறது. மாசற்ற சுற்றுச்சூழல், வளிமண்டலத்தில் அடிப்படை அம்சங்கள் போன்றவற்றை பதிவு செய்வதற்கும் பருவநிலையைப் பாதிக்கும் மாசுக்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கும் இமயமலைப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் இது உறுதுணையாக அமைகிறது.

Leave a Reply