கடற்படைக் கப்பல் தர்காஷ், செஷல்ஸ் சென்றடைந்தது.

இந்தியக் கடற்படையின் மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான தர்காஷ், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது செயல்பாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, 12 ஜூன் 2026 அன்று செஷல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்குச் சென்றடைந்தது.

கட்டுமானம், பராமரிப்பு ஆகிய இரண்டிலும் ஒரு நிலையான கடல்சார் ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸர்ஸ் ஜிஆர்எஸ்இ நிறுவனத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், செஷல்ஸ் கடலோரக் காவல் கப்பலான பிஎஸ் ஸோரோஸ்டரை இந்தியாவிலிருந்து செஷல்ஸுக்கு இந்த தர்காஷ் கப்பல் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பொதுவான கடல்சார் சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் இந்தப் பயணம் எடுத்துக் காட்டுகிறது.

இந்தப் பயணத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் ரோஹித் மிஸ்ரா, செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளார். இந்தப் பயணத்தின் போது கலாச்சார, சமூக நிகழ்வுகளும் நடைபெறும். மேலும் செஷல்ஸ் கடலோரக் காவல் கப்பலான பிஎஸ் ஸோரோஸ்டர் தொடர்பான முக்கிய உதிரிபாகங்கள், அத்தியாவசியப் பொருட்கள் செஷல்ஸ் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

தர்காஷ் கப்பலின் இந்த துறைமுகப் பயணமானது, இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையிலான தோழமை, பரஸ்பர ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைந்துள்ளது.

Leave a Reply