இந்தியா உட்பட 60 நாடுகளிலிருந்து பொருட்களின் இறக்குமதியை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழு நிறைவு செய்துள்ளது.

இந்தியா உட்பட 60 நாடுகளிலிருந்து பொருட்களின் இறக்குமதியை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழு நிறைவு செய்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க வர்த்தக சட்டம் 1974 பிரிவு 301-ன் கீழ், இந்த 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. பிரிவு 232-ன் கீழ் வரும் பொருட்கள் மற்றும் வேறு சில பொருட்களுக்கு இந்த வரி விதிப்பு பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இருந்து குறிப்பிட்ட அளவிலான இறக்குமதிகளை குறைந்த வரி விகிதங்களில் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கும் வகையில் ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு சிறப்பு நடைமுறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட வரிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள், பொது விசாரணைகளில் பங்கேற்க 2026 ஜூன் 22-க்குள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். எழுத்துப்பூர்வமான கருத்துகளை 2026 ஜூலை 6 வரை சமர்ப்பிக்கலாம். இதுகுறித்து பொது விசாரணை 2026 ஜூலை 7 அன்று நடைபெறும். பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இறுதி முடிவு மேற்கொள்வதற்கு முன்பாக இக்கருத்துகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி குழு பரிசீலிக்கும்.

பிரிவு 301 நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா – அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதேவேளையில் 2026 பிப்ரவரி 2 அன்று அறிவிக்கப்பட்ட, பிப்ரவரி 7 அன்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு ஏற்ப ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply