பதிண்டா எய்ம்ஸ் மருத்துவக் கல்வி மருத்துவமனையின் 2-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று (02.06.2026) கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுகாதார நலன், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் பதிண்டா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
நாள்தோறும் சுமார் 3,000 புற நோயாளிகளுக்கும் சுமார் 600 உள்நோயாளிகளுக்கும் இம்மருத்துவமனை சிகிச்சை அளித்து எய்ம்ஸ்-ன் உயர்தரத்தை உறுதி செய்வதாக அவர் கூறினார். அருகில் உள்ள 59 கிராமங்களிலும் மாதத்திற்கு இரண்டு முறை ஆயுஷ்மான் முகாம்கள் அமைக்கப்பட்டு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற தொற்று அல்லாத நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுவது உள்ளிட்ட முன்முயற்சிகளை மத்திய சுகாதார அமைச்சர் பாராட்டினார். தொலை மருத்துவ சேவைகள், நடமாடும் மருத்துவ பிரிவுகள், ஊரக விழிப்புணர்வு இயக்கங்கள், சுகாதார நலன் தொடர்புடைய மக்கள் நலன் திட்டங்கள் மூலம் இந்நிறுவனம் பொதுமக்களுக்கு சிறந்த பங்களிப்பை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
