இந்திய மருந்தியல் ஆய்வறிக்கை 2026 குறித்த அறிவியல் மாநாடு மற்றும் கலந்துரையாடல் அமர்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்தியல் ஆணையம் (IPC), தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER), மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மற்றும் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (IDMA) தெலங்கானா பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து, ஹைதராபாத்தில்இன்று இந்திய மருந்தியல் ஆய்வறிக்கை 2026 குறித்த அறிவியல் மாநாடு மற்றும் கலந்துரையாடல் அமர்வை ஏற்பாடு செய்தது. இந்த மாநாடு, “மருந்துத் தரத்தை உறுதி செய்வதில் இந்திய மருந்தியல் குறிப்புத் தரநிலைகள் மற்றும் மாசுத் தரநிலைகளின் முக்கியத்துவம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தது.

இந்த மாநாட்டை, ஹைதராபாத் என்ஐபிஇஆர் இயக்குநர் பேராசிரியர் சைலேந்திர சரஃப் தொடங்கி வைத்தார். மருந்துத் தர மேம்பாட்டு முயற்சிகளில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதற்காக ஐபிசி-யை அவர் பாராட்டினார். என்ஐபிஇஆர் அமைப்புடனான இத்தகைய ஒத்துழைப்புகள், ஒழுங்குமுறை அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களிடையே அறிவியல் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய தளத்தை வழங்குகின்றன என்று அவர் எடுத்துரைத்தார்.

Leave a Reply