மங்களூரு கடற்கரைக்கு அப்பால் மோசமான வானிலையில் 6 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

மங்களூரு கடற்கரைக்கு அப்பால், மஞ்சுமாதா என்ற இந்திய மீன்பிடி படகில் சிக்கித் தவித்த 6 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் 2026 ஜூன் 29 அன்று வெற்றிகரமாக மீட்டனர். சூரத்கல் கடற்கரைக்கு அப்பால், 33 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து பிற்பகல் நான்கு மணி அளவில் அதிவேக உயர்அலை கருவியின் மூலம், அபாய அழைப்பை இந்தியக் கடலோரக் காவல் படை கப்பலில் இருந்த வீரர்கள் அறிந்தனர். மோசமான வானிலை காரணமாக கடலில் ஏற்பட்ட சீற்றம், படகில் ஏற்பட்ட சேதம் ஆகியவற்றால் அதிலிருந்த மீனவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதை வீரர்கள் உணர்ந்து உடனடியாக உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடுமையான காற்று, போதிய வெளிச்சமின்மை நிலவிய போதும் கடலோரக் காவல் படை வீரர்கள் உயிர் காக்கும் படகுகளைப் பயன்படுத்தி விரைந்து சென்று மாலை 6 மணி அளவில் 6 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.

Leave a Reply