கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதியாக மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு மல்லிகார்ஜுன் கார்கே-க்கு மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (29.06.2026) நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திரு மல்லிகார்ஜுன் கார்கே இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ்; மாநிலங்களவையின் அவைத் தலைவரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சருமான திரு ஜெகத் பிரகாஷ் நட்டா; நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு; சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால்; தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்; மாநிலங்களவை உறுப்பினர்களான திருமதி சோனியா காந்தி, திரு ஜெயராம் ரமேஷ், திரு முகுல் வாஸ்னிக், டாக்டர் சையத் நசீர் ஹுசைன்; மக்களவை உறுப்பினர்களான திருமதி பிரியங்கா காந்தி, திரு கே சி வேணுகோபால்; மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் திரு பி சி மோடி மற்றும் செயலகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திவாஹர்
