இந்தியா – மலேசியா இடையே இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து புதுதில்லியில் விவாதிக்கப்பட்டது.

ராணுவ ஒத்துழைப்புக் குறித்த 12-வது இந்தியா – மலேசியா துணைக்குழுக் கூட்டம் 2026 ஜூலை 1 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய தரப்பில் பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத்தும், மலேசியா தரப்பில் அந்நாட்டு ராணுவ துணைத்தளபதி மேஜர் ஜெனரல் அமீர் மஹ்மூத் பின் அப்துல் ரஹ்மானும் கூட்டாகத் தலைமை தாங்கினார்கள்.

அப்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பின் முழு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து இருதரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. இருநாட்டு ராணுவத்திற்கு இடையேயான பரிமாற்றங்கள், இருதரப்பு பயிற்சிகள், பயிற்சி, ராணுவ வீரர்கள் உரையாடல், திறன் மேம்பாடு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

வழக்கமாக நடைபெறும் இருதரப்பு பயிற்சிகளை வெற்றிகரமாக நடத்தியது குறித்தும் இருதரப்பும் ஒப்புக் கொண்டது. ராணுவத்திற்கு இடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்துவது உரையாடல், இருநாட்டு ராணுவம் தொடர்பான படிப்புகளில் பங்களிப்பை அதிகரித்தல், பயிற்சி நிலையங்கள் மூலம் பாதுகாப்புப் படையினரிடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டது.

Leave a Reply