பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையில் ஒரு மைல்கல் தருணம் என்று இன்று பாராட்டினார்.
இந்த ஒப்பந்தம், வளர்ச்சிசார் கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்றும், இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இது வளர்ச்சிக்கு புதிய வழிகளைத் திறக்கும், வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் துறைகள் முழுவதும் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் மிகவும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று திரு மோடி மேலும் எடுத்துரைத்தார்.
பிரதமர் X அன்று பதிவிட்டார்;
இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மையில் இன்று ஒரு மைல்கல் தருணம்!
இன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது வளர்ச்சி கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நமது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் இலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), கைவினைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது வளர்ச்சிக்கு புதிய வழிகளைத் திறந்து, வாய்ப்புகளை உருவாக்கி, துறைகள் முழுவதும் நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும்.
நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் மிகவும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்
எஸ்.சதிஸ் சர்மா
