தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் சில தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டது. தேரத்ல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் அமல் செய்யப்படுவதை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வன்முறையற்ற, அச்சுறுத்தல் இல்லாத, பரிசுப் பொருட்கள் இல்லாத தேர்தலை உறுதி செய்ய தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் மற்றும் இவற்றின் எல்லைகளில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், அமலாக்க முகமைகளின் தலைவர்கள் ஆகியோருடன் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.
தேர்தல் தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க மேற்கு வங்கத்தில் 2728, பறக்கும் படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகள் நடத்த மேற்கு வங்கத்தில் 3,142 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பான பறிமுதல் நிர்வாக முறை செயல்பாட்டுக்கு வந்த பின், 2026 ஏப்ரல் 27 வரையிலான பறிமுதல் நிலவரம்:
மேற்குவங்கத்தில் 30 கோடி ரூபாய் ரொக்கம், 126.85 கோடி ரூபாய் மதிப்புள்ள 48,46,183 லிட்டர் மதுபானம், 110.12 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள், 58.28 கோடி ரூபாய் மதிப்புள்ள மதிப்புமிகு உலோகங்கள் 184.85 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 510.10 கோடி ரூபாயாகும்.
2021 தேர்தலின் போது, 339 கோடி ரூபாய் மதிப்புக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 510 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திவாஹர்
