தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடம் அருகே உள்ள காற்றாலை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் சிக்கியதாக தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் இவன் ஒருவன் மட்டுமே தனி நபராக இருந்து மாணவியை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. இவனோடு மற்ற நபர்கள் யாராவது உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
Director, UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
editorutlmedia@gmail.com
