அரசு மருத்துவமனையில் போதை ஆசாமிகள் அரிவாளை காட்டி மிரட்டியது, போதை கலாச்சாரத்தால் தமிழகம் சீரழிந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது!- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் நோயாளிகளையும், மருத்துவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் தமிழகம் எந்த அளவிற்கு போதை பொருட்களால் சீரழிந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் நகரம் முதல் கிராமம் வரை பெருகிவருகிறது. போதை கலாச்சாரத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வயதானவர்களும், வெளியில் பெண்களும் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது. தற்பொழுது கஞ்சா போதையில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் நுழைந்து அரிவாளை காட்டி மிரட்டி இருப்பது நோயாளிகளையும், மருத்துவர்களையும் அதர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

போதையின் தாக்கத்தால் அராஜக செயலை புரிந்தவர்கள் மீது காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா பொருட்களை வாங்குபவர்களை விட அதை விற்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். போதை இல்லா தமிழகம் என்று பேசினால் மட்டும் போதாது அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொலை,கொள்ளை, பெண்கள் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களுக்கு போதை கலாச்சாரமே ஆணிவேறாக இருந்த போதிலும் அவற்றை முற்றிலும் ஒழிக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இனிமேலும் தாமதிக்காமல் தமிழக அரசு போதை ஆசாமிகளின் குற்றங்களை தடுக்கு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply