தில்லி மற்றும் கொல்கத்தாவில் சட்ட விரோத தங்கக் கடத்தல் மோசடி முறியடிப்பு: ₹14.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கம் பறிமுதல், ஆறு பேர் கைது.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ – DRI), வெளிநாட்டு தங்கத்தை இந்தியாவிற்கு கடத்தி உள்நாட்டு சந்தையில் ரகசியமாக விற்பனையில் ஈடுபட்ட ஒரு கும்பலை கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக ₹14.13 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தத்தில், ₹13.41 கோடி மதிப்புள்ள 8286.81 கிராம் தங்கம், ₹19.67 லட்சம் மதிப்புள்ள 7350.4 கிராம் வெள்ளி, ₹51,74,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டன. உளவுத்துறை தகவல் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள், கொல்கத்தாவிலிருந்து ரயிலில் வந்த ஒரு பயணியை, புதுதில்லி ரயில் நிலையத்தில் சோதனை செய்ததில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது .

தொடர்ந்து கொல்கத்தாவில் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டவர் உட்பட மொத்தம் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply