இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட், மொரீஷியஸின் போர்ட் லூயிஸுக்கான தனது துறைமுக பயணத்தை நிறைவு செய்தது. இந்தக் கப்பல் 2026 மார்ச் 12 அன்று போர்ட் லூயிஸின் சாம்ப் டி மார்ஸில் நடைபெற்ற 58-வது மொரீஷியஸ் தேசிய தின அணிவகுப்பில் கடற்படை இசைக்குழு, ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆகியவற்றுடன் பங்கேற்றது.
கப்பலில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மொரீஷியஸின் கல்வி, மனிதவளத்துறை அமைச்சர் டாக்டர் மகேந்த் குங்காபிரசாத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மொரீஷியஸ் அரசின் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த, தொழில்முறை தொடர்புகள், கலாச்சார ஈடுபாடுகள், விளையாட்டு நிகழ்வுகள் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டது. மொரிஷியஸ் தேசிய கடலோர காவல்படை வீரர்களுக்கு கடலோர கண்காணிப்பு, தீயணைப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்த கப்பல் 12 மார்ச் 2026 அன்று பார்வையாளர்களுக்கு திறந்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கப்பலைப் பார்வையிட்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா
