தூத்துக்குடி அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கொலை!-தமிழக அரசின் செயலற்ற ஆட்சியும், காவல்துறையினரின் முறையற்ற பணியும் தான் காரணம்!- ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதற்கு

தூத்துக்குடி அருகே 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடுமை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அந்த மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.  தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், மார்ச் 9 இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு அவரை அந்தப் பகுதி முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டு, அலைக்கழிக்கப்பட்ட பின்னரே புகார் ஏற்கப்பட்டுள்ளது. 

      இதற்கிடையில், மார்ச் 10  இரவு காட்டுப் பகுதியில் தேடியபோது, அந்த 

மாணவி சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் மிகவும் மோசமானதாக உள்ளன. காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கச் சென்றால் அலட்சியம், காணவில்லை என்றால் கண்டுபிடிப்பதில் அலட்சியம், குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதில் மெத்தனப்போக்கு – இப்படி தமிழ்நாட்டில் மக்களைப் பாதுகாக்கும் காவல்துறையினரின் பணி முறையாக சரியாக நடைபெறவில்லை. இதற்கு காரணம் தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் கவனமின்றி, முறையற்று ஆட்சி நடத்துவது தான்.

தமிழ்நாட்டில் சிறுமி முதல் மூதாட்டி வரை அனைவருக்கும் எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தொடர்கின்றன. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக அரசு தூத்துக்குடி மாணவிக்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யவும், அந்தக்கொடூரக்காரர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

தமிழக அரசின் செயலற்ற ஆட்சியால் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் நீடிக்கின்றன. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடுமையாக்கவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பது தான் பொது மக்களின் எண்ணமாகும்.

எனவே தமிழக அரசு காவல்துறையினரின் பணியை ஒழுங்குபடுத்தி, மாநிலத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை அனைவருக்குமான பாதுகாப்பில் முறையாக, சரியாக பணியாற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply