மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு ரூ. 1,912.99 கோடி கூடுதல் மத்திய உதவியை அங்கீகரித்து ளளது.

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்  துறை அமைச்சருமான திரு. அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, 2025-ம் ஆண்டில் வெள்ளம், திடீர் வெள்ளம், மேகவெடிப்பு, ‘மோன்தா’ புயல், நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு ரூ. 1,912.99 கோடி கூடுதல் மத்திய உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உதவி தேசிய பேரிடர் நிவாரண  நிதியத்திலிருந்து  வழங்கப்பட்டுள்ளது, இது மாநில பேரிடர் நிவாரண  நிதியத்தில்  கிடைக்கும் ஆண்டிற்கான தொடக்க இருப்புத்தொகையில் 50% சரிசெய்தலுக்கு உட்பட்டது. மொத்தத் தொகையான ரூ. 1,912.99 கோடியில், ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ. 341.48 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ. 15.70 கோடியும், குஜராத்துக்கு ரூ. 778.67 கோடியும், இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ. 288.39 கோடியும், நாகாலாந்துக்கு ரூ. 158.41 கோடியும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ. 330.34 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பேரழிவுகளின் போது மாநில அரசுகளுடன் இணைந்து நின்று தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்தக் கூடுதல் உதவித்தொகை, மாநிலங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியில்  மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய நிதிக்கும் கூடுதலாகும்.  2025-26-ம் நிதியாண்டில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ. 20,735.20 கோடியும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 21 மாநிலங்களுக்கு ரூ. 3,628.18 கோடியும் விடுவித்துள்ளது.

கூடுதலாக, மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து  23 மாநிலங்களுக்கு ரூ. 5,373.20 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 21 மாநிலங்களுக்கு ரூ. 1,189.56 

Leave a Reply