1945 – ம் ஆண்டு மருந்துகள் விதிகளின் அட்டவணை எப் – ல் (ரத்த பாதிப்புகளுக்கான மருந்துகள் பரிசோதித்தல்), பகுதி 12 சி – ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பெறும் வகையில், மார்ச் 9, 2026 அன்று இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ரத்தப் பாதிப்புகளுக்கான மருந்துகளைப் பரிசோதிப்பதற்கான ஒழுங்குமுறைத் தேவைகளை, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தியல் தரநிலைகளுடன் சீரமைக்கவும், உலகளவிலான சிறந்த நடைமுறைகளின் கீழ் உத்தரவாதம் பெறவேண்டிய அவசியம் இல்லாத மருந்துகள் உற்பத்தியில், கூடுதல் சோதனை நடைமுறைகளை நீக்கவும் இந்த வரைவுத் திருத்தம் வகை செய்கிறது.
இந்திய மருந்தகம், பிரிட்டிஷ் மருந்தகம், யுனைடெட் ஸ்டேட்ஸ் மருந்தகம் மற்றும் ஐரோப்பிய மருந்தகம் ஆகியவற்றில், ரத்தத்தில் இருந்து பிரித்தெடுப்பதற்கான மனித பிளாஸ்மாவின் அதிகாரப்பூர்வ தனிச்சிறப்புகளின்படி, வரையறை செய்யப்பட்ட மனித பிளாஸ்மாவிற்கு கடும் சோதனை நெறிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
எம்.பிரபாகரன்
