தமிழகத்தில் எரியாயு தட்டுப்பாடு ஏற்படாதவாறு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்!- ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் தற்பொழுது எரிவாயு (கேஸ்) தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது.
மத்திய அரசு எரியாயு தட்டுப்பாடு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவையான 85% வரையிலான எரிவாயு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போரின் காரணமாக எரிவாயு இறக்குதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. போரின் காரணமாக விலையும் உயர்ந்து காணப்படுகிறது. அதனால் எண்ணைய் நிறுவனங்கள் சிறிய அளவில் விலையை உயர்த்தக் கூடிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதோடு தற்பொழது வணிக மற்றும் தொழிற்சாலைக்கான எரிவாயு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்திய ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் மாற்று ஏற்பாடு செய்யும்படியும் அறிவிறுத்தியுள்ளது. அதனால் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே மத்திய அரசு நிலைமைய உணர்ந்து பொது மக்களும், வணிக நிறுவனங்களும் பாதிக்காதவண்ணம் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பொது மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், எரிவாயு தட்டுபாடு ஏற்படாதவாறும், எரிவாயு பதுக்கல் உருவாகாதவாறும், விலை உயர்வு ஏற்படாலும், தடுக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு, எடுக்க வேண்டும், என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply