நான்கு நாடுகளின் தூதர்கள், தங்களது பணி நியமன ஆணைகளைக் குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்கள்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (அக்டோபர் 3, 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மௌரித்தேனியா, லக்சம்பர்க், கனடா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதர்களின் பணி நியமன ஆவணங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  ஏற்றுக்கொண்டார்.

 பணி நியமன ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்:

1. மௌரித்தேனியா இஸ்லாமியக் குடியரசின் தூதர்  திரு அஹ்மெடோ சிடி முகமது

2. லக்சம்பர்க் நாட்டின் தூதர் திரு கிறிஸ்டியன் பீவர்

3. கனடாவின் உயர் ஆணையர் திரு கிறிஸ்டோபர் கூட்டர்

4. ஸ்லோவேனியா குடியரசின் தூதர் திரு. தோமஸ் மென்சின்

Leave a Reply