தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் நாடு முழுவதும் வேளாண் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் திங்கட்கிழமை அன்று விடுவித்தார். இந்த முன்முயற்சியின் கீழ் 6,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேரடிப்பயன் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.21.35 கோடி விடுவிக்கப்பட்டது. இந்தப் புதிய முன்முயற்சியின் வாயிலாக நேரடிப்பயன் பரிமாற்றம் மூலம் ஒவ்வொரு மாதமும் வேளாண் துறை மாணவர்கள் தாமதமின்றி தங்களுடைய கல்வி உதவித்தொகையைப் பெற முடியும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், கல்வி உதவித்தொகை என்பது வெறும் நிதி உதவியாக மட்டுமின்றி, வேளாண் துறையைச் சார்ந்த கல்வியை வலுவடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
திவாஹர்
