உத்திரப்பிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு தொடர்பான மாநாடு – டிஆர்டிஓ நடத்தயது.

உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில்வழித்தடத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தித் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, லக்னோவில் நேற்று (செப்டம்பர் 06, 2025) ஒரு மாநாட்டை நடத்தியது. பல்வேறு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதி, தொழில்நுட்ப ஆலோசனை, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் டிஆர்டிஓ-வின் பரிமாற்ற ஒத்துழைப்பு ஆகிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

தமது தொடக்க உரையில், டிஆர்டிஓ தலைவர் திரு சமீர் காமத், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்றார். அந்த நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக டிஆர்டிஓ மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply