பஞ்சாப் மாநிலம் படாலாவில் பத்திரிகையாளர், காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள படாலாவில் பத்திரிகையாளர் ஒருவர் இரண்டு காவலர்களால் தாக்கப்பட்டது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து அது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

இது குறித்த வீடியோ பதிவில், தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர் அசைவின்றி கிடப்பதைக் காண முடிந்தது. இச்செய்தி உண்மை எனில் இது மனித உரிமைகளை மீறுவதாக ஆணையம் கருதுகிறது. இதையடுத்து இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply