முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

”அவரது நினைவு நாளன்று அடல் ஜியை நினைவு கூர்கிறேன். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் நாட்டின் முழுமையான முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.”

Leave a Reply