நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு.

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் குழுவைச் சந்தித்தார். புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தித்  திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அவர்களின்  கவனம் மற்றும் அனுபவங்கள் பற்றி  கேள்விப்பட்டதில் திரு மோடி வியப்படைந்தார்.

இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“முன்னதாக, இன்று காலை, தமிழ்நாட்டைச் சேர்ந்த  விவசாயிகள் குழு ஒன்றை  நாடாளுமன்றத்தில் சந்தித்தேன்.  புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அவர்களின்  கவனம் மற்றும் அனுபவங்கள் பற்றி  கேட்டறிந்தது உற்சாகம் அளிப்பதாக இருந்தது.”

Leave a Reply