கட்ச்சின் அழகை எடுத்துரைக்கும் முயற்சிகளுக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அங்கு செல்ல ஊக்குவிப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

“பிரதமர் திரு நரேந்திர மோடியை, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் திரு வேணு சீனிவாசன் மற்றும் திரு சுதர்சன் வேணு ஆகியோர் நேற்று புதுதில்லியில் சந்தித்தனர். கட்ச்சின் அழகை விவரித்து எடுத்துரைக்கவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அங்கு செல்ல ஊக்குவிக்கவும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு, திரு நரேந்திர மோடி அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“திரு வேணு சீனிவாசன், திரு சுதர்சன் வேணு ஆகியோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கட்ச்சின் அழகை எடுத்துரைத்து விவரிக்கும் முயற்சிக்காகவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அங்கு செல்ல அவர்கள் ஊக்கம் அளிப்பதற்காகவும் நான் அவர்களைப் பாராட்டுகிறேன்”

Leave a Reply