டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைக்கான இணைப்பு, அண்டை நாடுகளின் ஒத்துழைப்புக்கு பெரும் உந்துசக்தியாக திகழும் வகையில், இந்தியா – நேபாளம் நாடுகளிடையே, ஜூன் 6, 2026 அன்று, பரஸ்பரம் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.
புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த நடைமுறை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்பிற்கும், நேபாளத்தின் தேசிய பணப் பரிவர்த்தனை அமைப்பிற்கும் இடையே, நேரடி இணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைப்பு, இரு நாடுகளின் மக்களும், மொபைல் வங்கிச் செயலிகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வாயிலாக நேரடியாக, தடையற்ற, நிகழ்நேர, பாதுகாப்பான உடனடிப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவுகிறது.
இந்த பணப் பரிவர்த்தனைக்கான இணைப்பு, நிதிசார் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது. மேலும், யுத்த நடைமுறை, இந்தியா – நேபாளம் இடையே, வலுவான பொருளாதார, டிஜிட்டல் நட்புறவை மேம்படுத்த வகை செய்கிறது. இது, எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும், பாதுகாப்பான, குறைந்த செலவில், எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளுக்கான பிராந்திய இலக்குகளுடன் பொருந்தும் வகையிலும் உள்ளது. நீண்டகால சமூக மற்றும் பொருளாதாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. இந்தத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு நடவடிக்கை, இந்திய தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகத்தின், சர்வதேசப் பிரிவு,நேபாளத்தின் நேபாள் கிளியரிங் ஹவுஸ் லிமிடெட் நிறுவனம் இடையேயான ஒத்துழைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டது.
எம்.பிரபாகரன்
