இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளைப் பாதுகாப்பான போக்குவரத்திற்கான அமைப்பாக மாற்றுவதில் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாடுகள்.

நாட்டின் பரபரப்பான போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலைகளில். நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளதை காண முடிகிறது. இந்த வாகனத்தின் மேற்கூரையில் உள்ள நவீன நுண்ணாய்வுக் கருவி (ஸ்கேனர்), கண்ணுக்குப் புலப்படாத தொலையுணர்வு கதிர்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் மேம்பட்ட முப்பரிமாண லேசர் தொலையுணர்வு கருவிகள் (சென்சார்), சாலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் வரைபடமாக மாற்றி, தரவுகளை ஒருங்கிணைக்கும் பணிகளைத் தொடங்குகின்றன.

இது தகவல் கட்டமைப்புடன் கூடிய கண்காணிப்பு வாகனமாகும். லேசர் தரவுத் தொகுப்புக் கருவிகள் (புரொஃபைலர்கள்), ஜிபிஎஸ், அதிநவீன வரைபடப் படிமத் தொழில்நுட்பம் போன்ற அமைப்புக்களைக் கொண்ட ஒரு கண்காணிப்பு வாகனமாகும். இந்த மேம்பட்டக் கருவிகள், தேசிய நெடுஞ்சாலைகளில், இந்த கண்காணிப்பு வாகனம் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும்போது, சாலையின் மேற்பரப்பில் உள்ள விரிசல்கள், பள்ளங்கள், மேடுகளை ஸ்கேன் செய்து, நெடுஞ்சாலைகளின் அமைப்பை உயிரோட்டம்மிக்க டிஜிட்டல் வரைபடங்களாக மாற்றுகிறது. வழக்கமான போக்குவரத்துக்கான வாகனத்தைப் போன்ற அமைப்பை கொண்ட இந்த வாகனம், தேசிய நெடுஞ்சாலைகளின் கண்காணிப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம், சாலைக் கண்காணிப்பில் இது ஒரு பெரும் முன்னேற்றம் என அறிவித்துள்ளது. மேம்பட்ட முப்பரிமாண லேசர் அடிப்படையிலான தரவுத் தொகுப்பு அமைப்புகளுடன் கூடிய வலையமைப்பு, கண்காணிப்பு வாகனங்களை அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தவுள்ளது.

பல்வேறு தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த உயர் தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய வாகனங்கள், சாலை கண்காணிப்பை மேற்கொள்வதுடன், அவற்றின் தரம் குறித்த தரவுகளை பதிவு செய்யும் டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பாகவும் உள்ளது. சாலையின் ஒவ்வொரு பகுதியையும் ஸ்கேன் செய்வதன் மூலம், சாலையின் நிலை, தரம் குறித்த விரிவான தரவுகளைச் சேகரிப்பதுடன், சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்கள், மேடுபள்ளங்கள் போன்ற குறைபாடுகளையும் கண்டறிகின்றன.

Leave a Reply