தமிழக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம் மற்றும் நியூஸ் தமிழ் 24/7 ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
அரசு கேபிளுக்கு முறையான ஒப்பந்தத்தில் கட்டணத்தை செலுத்தும் பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம் மற்றும் நியூஸ் தமிழ் 24/7 ஆகிய செய்தி சேனல்களை தொடர்ந்து ஒளிபரப்ப தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு கேபிள் டிவி (TACTV) ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம் மற்றும் நியூஸ் தமிழ் 24/7 ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
காரணம் அரசு கேபிளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையாக கட்டணத்தை செலுத்தும் இந்த 3 சேனல்கள் ஏன் ஒளிபரப்பப்படவில்லை.
அவ்வப்போது அரசு கேபிளில் சில செய்திச் சேனல்கள் துண்டிக்கப்படுவது குறித்த சர்ச்சைகள் எழுவது தொடர்கின்றன.
குறிப்பாக இந்த 3 சேனல்கள் நீக்கப்பட்டதற்கு தற்காலிக மென்பொருள் (Software) மற்றும் சர்வர் கோளாறுகள் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
ஏனென்றால் தமிழக அரசின் ஆட்சி முறையில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டும் சேனல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும்.
எனவே தமிழக அரசு கேபிளில் முறையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம் பெற்றுள்ள அனைத்து சேனல்களின் ஒளிபரப்புக்கும் தடையில்லாத நிலையை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இனிமேல் இதுபோன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான போக்கு இருக்கக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
