மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட / மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.
மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் முகேஷ்பாய் ஜே ரத்வா, திரு பவன் கெரா, திரு மகேஷ் கேவட், திரு ஜேம்ஸ் பாங்சாங் கொங்கல் சங்மா, திரு கியாங்டே லாட்லுவாங்கிமா, டாக்டர் சதீஷ் பூனியா, திரு பிரகாஷ் சிக் பரேக், திருமிகு சுஷ்மிதா தேவ், திரு சுகேந்து சேகர் ரே ஆகியோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இவர்களில் ஐந்து உறுப்பினர்கள் இந்தி மொழியிலும், இருவர் ஆங்கில மொழியிலும், இரண்டு உறுப்பினர்கள் வங்க மொழியிலும் பதவியேற்றுக் கொண்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 3 உறுப்பினர்களும், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் ஒன்பது பேர் மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திவாஹர்
