இந்தியாவின் எரிசக்தி சந்தைக்கு அதிகாரமளிப்பதற்கான நிலக்கரி பரிமாற்றங்கள்.

நாட்டில் நிலக்கரி விநியோக நடவடிக்ககளை நவீனப்படுத்துவதின் ஒரு முயற்சியாக நிலக்கரி பரிமாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை அரசு அமைத்துள்ளது. அண்மையில், இயற்றப்பட்ட சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2025 கனிமங்கள் பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தி நிலக்கரி, அதனைப் பதப்படுத்துதல் முறைகள் உட்பட வெளிப்படையான திறன்மிக்க கனிம வர்த்தகத்தை ஊக்குவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இந்த முன்முயற்சிக்காக நிலக்கரி அமைச்சகம், நிலக்கரி பரிமாற்றங்கள் பதிவு, ஒழுங்குபடுத்தலுக்காக 2025 டிசம்பரில் நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பை நிறுவியது. நிலக்கரி பரிமாற்றத்திற்காகவும், வர்த்தகத்திற்காகவும், தகுதி உடைய நிறுவனங்களுக்கு, நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அமைப்பு அங்கீகாரம் வழங்கும். இந்தப் பதிவுகள் 25 ஆண்டு காலத்திற்கு அனுமதிக்கப்படும்.

நிலக்கரி பரிமாற்றங்கள் அறிமுகம், நிலக்கரி சந்தையில், பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும். இது வெளிப்படையான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான வாங்குவோருக்கு எளிதான அணுகலை அளிக்கும். சந்தைப் பங்களிப்பை மேம்படுத்த பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்களும் தளத்தைப் பயன்படுத்த முடியும்.

நிலக்கரி பரிமாற்ற முன்முயற்சி எளிதாக வர்த்தகம் செய்தலை மேம்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல், நவீன, தற்சார்பு எரிசக்தி சூழலைக் கட்டமைத்தல் ஆகிய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

போட்டிமிகுந்த திறன்மிக்க நிலக்கரி சந்தையை உருவாக்குவதன் மூலம் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது, வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பது ஆகிய சீர்திருத்தம் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply