பிரதமர் நரேந்திர மோதி, ஜூன் 5-ம் தேதி சூரத், டாமனுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூன் 5 அன்று, குஜராத் மற்றும் டாமனுக்குப் பயணம் மேற்கொள்கிறார். சூரத் மாவட்டத்தில் உள்ள ஹஜிராவுக்குச் செல்லும் அவர், அங்கு நடைபெற்று வரும் தொழில்துறை செயல்பாடுகள், உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்கிறார். அன்று மாலை 4:15 மணியளவில், சூரத் நகரில் ரூ 18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து, அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.

பின்னர் டாமன் தீவிற்குச் செல்லும் பிரதமர், அங்கு மாலை 6:15 மணியளவில், ‘நமோ’ விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர், தமனில் உள்ள ‘நமோ’ மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் பிரதமர், அன்றிரவு 7:15 மணியளவில், ரூ 2,970 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். மேலும், லட்சத்தீவு யூனியன் பிரதேச மேம்பாட்டிற்காக ரூ 885 கோடி மதிப்பிலான நான்கு முக்கியத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டி வைத்து மக்களிடையே உரையாற்றுகிறார்.

சூரத் நகரில் சாலை, மின்சாரம், தொழில்துறை சார்ந்த பல்வேறு துறைகளில், ரூ 18,800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

வதோதரா-மும்பை இடையேயான விரைவுச்சாலையின் 6-வது, 7-வது தொகுப்புகளை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இது குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே அதிவேகப் போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்துத் திறன், பொருளாதார வளர்ச்சிக்கான இணைப்பை மேம்படுத்தும். பழங்குடியினப் பகுதிகள் முழுவதும் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், ‘ஒற்றுமைச் சிலைக்கு’ செல்லும் பாதைகளை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை-56-ல் உள்ள முக்கியப் பிரிவுகளை, நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணி உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

சூரத் நகரில் 220 படுக்கை வசதிகள் கொண்ட தொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழக மருத்துவமனையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பணியிடங்களில், விபத்துக்களால் ஏற்படும் காயங்கள், மருத்துவ அவசர நிலைகளைச் சரியான தருணத்தில் கையாள்வதை உறுதிசெய்யும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமனில் ரூ 2,970 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த வளர்ச்சித் திட்டங்கள் சுகாதாரம், சிவில் விமானப் போக்குவரத்து, சுற்றுலா, உள்கட்டமைப்பு, தகவல் தொடர்புக்கான இணைப்பு வசதிகள், பொது நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. மேலும், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இத்திட்டங்கள் பெரும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply