நாடு முழுவதும் உள்ள ரயில்வே துறையின் கள அதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் புதுதில்லியில் இன்று (21.05.2026) ஆலோசனை மேற்கொண்டார். புதுதில்லியில் நடைபெற்ற இந்த முக்கியமான உயர்நிலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே இணையமைச்சர்கள் திரு வி சோமன்னா, திரு ரவ்னீத் சிங் பிட்டு, ரயில்வே வாரியத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மையில் ஏற்பட்ட சில தீ விபத்துக்கள் உள்பட பல்வேறு சம்பவங்கள் குறித்த தொடக்கக்கால விசாரணையின் போது இது சமூக விரோதிகளின் செயல் என்று கண்டறியப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையும் தீவிரமாக விசாரித்து வருகிறது.
பல்வேறு தருணங்களில் ரயில்வேயின் உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்க உதவியுள்ளது. பயணிகள், தங்கள் பயணத்தின் போதும், ரயில் நிலைய வளாகங்களில் காத்திருக்கும் போதும் சமூக விரோதச் செயல்களை முறியடிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு பயணிகளை ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. பயணிகள், பயணிக்கும் போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
ரயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அல்லது சந்தேகத்திற்கிடமான நபருடன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளரது.
இது குறித்து உடனடியாக ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
