பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தென்கொரியாவின் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை அமைச்சரும் இணைந்து சியோலில் இந்திய போர் நினைவிடத்தைத் திறந்து வைத்தனர்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் தென்கொரியாவின் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை அமைச்சர் திரு குவான் ஓ யூல் இணைந்து சியோலில் உள்ள இம்ஜிங்காக் பூங்காவில் இந்திய போர் நினைவிடத்தை 2026 மே 21 அன்று திறந்து வைத்தனர். கொரியப் போரின் 75-ம் ஆண்டு நினைவாகக் கட்டப்பட்ட இந்த நினைவிடம், போரின் போது இந்திய ராணுவத்தின் பாராஃபீல்டு ஆம்புலன்ஸ் மற்றும் இந்தியப் பாதுகாப்புப் படை ஆற்றிய வீரம், தியாகம் மற்றும் மனிதாபிமானச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இரு நாட்டு அமைச்சர்களும் இந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தென்கொரிய மக்களால் மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் தொடர்ந்து நினைவு கூரப்படும் துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது பேசிய பாதுகாப்பு அமைச்சர், கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் மனிதாபிமான   உதவிகளுக்கு இந்திய பங்களிப்பை எடுத்துரைத்தார். இருநாடுகளின் பகிரப்பட்ட வரலாறும், தியாகங்களும், இந்தியா – தென்கொரியா சிறப்புமிக்க உத்திசார்ந்த கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளமாக தொடர்ந்து திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply