விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண்
எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று(மே 20) நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சுமார் 40,000 ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் மேற்கண்ட நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயப் பெருமக்கள், மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கும், இதன்மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் வழிவகை ஏற்படும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விவசாயப் பெருமக்கள் மற்றும் மட்பாண்டத் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டுமென்றும், விவசாயிகள் மற்றும் மட்பாண்டத் தொழிலாளர்கள் தொடர்புடைய துறை அலுவலர்களின் மேற்பார்வையில் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சி.கார்த்திகேயன்
