சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா உரையாற்றினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, இன்று சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (PGIMER) 39 வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார் . இந்நிகழ்ச்சியில், பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு. குலாப் சந்த் கட்டாரியா மற்றும் இந்திய அரசின் நிதி ஆயோக்கின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் வினோத் கே. பால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு நட்டா, பட்டம் பெறும் மாணவர்கள் தங்களின் கடின உழைப்பு, ஒழுக்கம், உறுதிப்பாடு, அத்துடன் அவர்களின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோரின் முயற்சிகளின் உச்சகட்டமாக ஒரு “முக்கிய மைல்கல்லை” எட்டியதற்காக வாழ்த்தினார். மேலும், இந்தியாவில் மருத்துவ அறிவியல் கல்வி மற்றும் நோயாளி பராமரிப்பை மேம்படுத்துவதில் பிஜிஐஎம்இஆர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.

“சண்டிகர் பிஜிஐ, வட இந்தியாவின் மிகப்பெரிய பொது சுகாதார அமைப்புகளில் ஒன்றாகும். மேலும் இது உலகத் தரம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு, உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு மையமாகவும் திகழ்கிறது” என்று திரு நட்டா எடுத்துரைத்தார். “பல தசாப்தங்களாக, தலைமுறை தலைமுறையாக வந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகள், பிஜிஐ-ஐ ஒரு புகழ்பெற்ற வர்த்தகப் பெயராக நிலைநிறுத்தியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார். பிஜிஐ-இன் பட்டதாரிகள் இந்த நிறுவனத்தின் பெருமையை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்த மதிப்புமிக்க நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply