மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் ஊடகம், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் துறையை வலுப்படுத்துவதையும், படைப்பாற்றல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட மூன்று முக்கிய முன்னெடுப்புகளை இன்று தொடங்கி வைத்தார்.
இந்திய கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் (IICT)
மூலம் கூகுள் மற்றும் யூடியூப் உடன் இணைந்து தேசிய செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுத் திட்டம் ;
WAVES OTT தளத்தில் குடிமக்களுக்கான படைப்பாளிகள் தளமான
MyWAVES ; மற்றும் DD Free Dish சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக தொலைக்காட்சிப் பெட்டிகளில் மேம்பட்ட மின்னணு நிகழ்ச்சி வழிகாட்டி (EPG) மற்றும் உள்ளமைக்கப்பட்ட செயற்கைக்கோள் ட்யூனர்களை அறிமுகப்படுத்துதல் ஆகிய இந்த மூன்று முன்னெடுப்புகளும், ‘ஆரஞ்சுப் பொருளாதாரத்தை’ ஊக்குவிப்பதையும், பொது ஒளிபரப்பை வலுப்படுத்துவதையும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் முக்கியப் பிரதிநிதிகள், யூடியூப் இந்தியாவின் தலைவர் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திவாஹர்
