- If Governor is withholding assent for a Bill, then it must be returned to the Legislature.
- Governor has discretion and is not bound by the aid and advice of the Council of Ministers in deciding assent for Bills under Article 200 of the Constitution.
- Discharge of functions by the Governor under Article 200 is not justiciable. The Court can issue a limited direction to the Governor to decide in a reasonable time if there is prolonged, unexplained or indefinite inaction.
- Immunity under Article 361 will not shield the Court’s power to issue directions for a time-bound decision in cases of prolonged delay.
- The Court cannot prescribe timelines for the Governor’s decision on Bills under Article 200.
- The President’s assent under Article 201 cannot be subjected to judicially prescribed timelines.
- The President’s action under Article 201 is not justiciable.
- The President is not bound to seek Court’s advice every time a Bill is reserved by the Governor for President’s assent.
- The Constitution does not allow the concept of “deemed Assent” for Bills.
- Supreme Court cannot use Article 142 powers to declare “deemed assent” for Bills.
39157_2025_1_1501_66169_Judgement_20-Nov-2025
மசோதக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்த உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பில், 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது
கடந்த 2023ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் அதேபோல் மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை கேள்வி கேட்கும் வகையில் மே – 13ம் தேதி அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். குடியரசுத் தலைவர் அனுப்பிய 14 கேள்விகளை வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது விரிவான விசாரணை நடத்தியது.
10 நாட்கள் தொடர் விசாரணைக்கு பின்னர் கடந்த செப்டம்பர் 11ம் தேதி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இன்று இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் , நீதிபதிகள் சூர்யகாந்த் , விக்ரம் நாத் , பி.எஸ் நரசிம்மா , அதுல்.எஸ்.சந்தூர்கர் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு குறித்த முக்கிய அம்சங்களை வழங்குவதற்கு முன்பாக முன்பு வழக்கில் வைக்கப்பட்ட வாத, பிரதிவாதங்களை குறித்து கருத்து தெரிவித்தனர். அதில், ஆளுநருக்கு அரசியல் சாசனம் 200 மற்றும் 21 இல் இருக்கும் அதிகாரம் குறித்து வாதம் வைக்கப்பட்டது. இதே போல் மசோதாவுக்கு ஒப்புதல் எவ்வாறு அளிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்தும் விரிவாக வாதங்கள் கேட்கப்பட்டது என்றும், குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீதும் , மசோதாக்கள் மீது ஆளுநர் வசம் உள்ள அவகாசங்கள் என்ன என்பது குறித்தும் அனைத்து தரப்பிலிருந்தும் வாதங்கள் வழக்கில் முன்வைக்கப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவை தவிர அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உள்ள உச்ச வரம்புகள் குறித்தும் வாதம் முன்வைக்கப்பட்டது என்றும் கூறினர்.
ஒரு ஆளுநர் அமைச்சரவை ஆலோசனை, அவர்களின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெளிவுபடுத்தி உள்ளது என்றதோடு ஒரு மசோதா அமைச்சரவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடைய ஆதரவு இல்லாமல் சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்காது என்றும் வாதங்கள் வைக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முதல் பிரதான பிரச்சனையாக உள்ளது மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும்? என்பதுதான்.
அதன்படி ஒரு மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநருக்கு நான்கு விருப்பங்கள் வழங்கப்படுகிறது என ஒரு தரப்பு வாதங்களை முன் வைத்ததாகவும், ஆனால் மற்றொரு தரப்பு மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் ஆளுநருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன் வைத்ததாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து வழக்கில் முக்கியமான தீர்ப்பின் அம்சங்களை நீதிபதிகள் வாசித்தனர்.
அதன்படி, மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் போது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும்
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது
நாட்டின் கூட்டாட்சியில் ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவை உடனான வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது
அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வது போல 4வது வாய்ப்பு இல்லை
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் இல்லையென்றால் அதை நிராகரிக்க வேண்டும். இவைத்தவிர 4வது வாய்ப்புகள் ஆளுனருக்கு இல்லை
அரசியல் சாசனப் பிரிவு 200, 201-ன் படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
அரசியல் சாசன விதிகளின்படி மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கும் , மறுபரிசலனைக்காக திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் அதிகாரத்தை பெறுகிறார்
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அதன் அமைச்சரவை தான் முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை
மாநில மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட கால அளவிற்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிப்பது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள நெளிவு சுளிவுகளுக்கு முரணாக உள்ளது, அதேவேளையில் ஏப்ரல் – 8ல் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புக்கு செல்ல விரும்பவில்லை
நீதிமன்றங்களால் மசோதக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது
தமிழ்நாடு அரசு தொடர்பான வழக்கில் ஏப்ரல் 8-ல் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது
மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலம் நிர்ணயித்து முடிவெடுங்கள் என ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது, வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும்
ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது, இருப்பினும் ஒரு மசோதா காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்
ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருந்தால் நீதிமன்றங்கள் நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும் என்றதோடு, ஆளுநர்களுக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவையை பிறப்பிக்க முடியும்
இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது.
–கே எஸ் ராதாகிருஷ்ணன்., மூத்த வழக்குரைஞர்
