குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 ஜூன் 30 முதல் ஜூலை 1 வரை உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். பரேலி, கோரக்பூர் ஆகிய இடங்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஜூன் 30 ஆம் தேதி, பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், அவர் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
ஜூலை 1-ம் தேதி, கோரக்பூரில் உள்ள மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். கோரக்பூரில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழகத்திற்கும் அவர் செல்லவுள்ளார். அங்கு அவர் கலையரங்கம், கல்வி வளாகம், பஞ்சகர்மா மையம் ஆகியவற்றைத் திறந்து வைப்பதுடன், புதிய பெண்கள் விடுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
திவாஹர்
