முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் 2015 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் : டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன்!

நீதிபதி ஓ.பி.ஷைனி

நீதிபதி ஓ.பி.ஷைனி

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர், 2015 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

maran brothers fஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, அதன் நிறுவனர் சிவசங்கரனுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிமாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, தனது துணை நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றம்(FIR NO: CBI/ACB22A/11/11) சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரங்கள் இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்தது.

அதனால், குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று சி.பி.ஐ. கோரிக்கை விடுத்தது. இதைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவு இன்று (29.10.2014) பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

DAYANIDHI MARANஇந்நிலையில், இந்த வழக்கில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் வருகின்ற 2015 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in