கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ரூ. 214 கோடி சட்ட விரோதமாக கைமாறியது தொடர்பான வழக்கில் இருந்து, மு.கருணாநிதி மனைவி தயாளு அம்மாவை விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் !

scmidkalaignar tv officedhayaluஏர்செல், மேக்ஸிஸ் விவகாரத்தில் ரூ. 214 கோடி கைமாறியது தொடர்பாக அமலாக்க துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மனைவி தயாளு அம்மாவை விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஏர்செல் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு கைமாறியபோது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மூலம் நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இதன் பின்னரே 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு செய்பப்பட்டதாக எழுந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக ரூ. 214 கோடி கைமாறியது. இதற்கான கணக்கு விவரம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அமலாக்க துறையினர் தனியாக ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்தனர். இந்த வழக்கில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரான தயாளு அம்மாவும் சேர்க்கப்பட்டார்.

SELVIகுறைந்த பட்சம் பங்கு கொண்ட தயாளு அம்மாவுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், இவர் நிறுவன நடவடிக்கையில் எதுவும் பங்கெடுப்பதில்லை. இதனால் இந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாவை விடுவிக்க வேண்டும் என அவரது மகள் செல்வி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதனை ஏற்க முடியாது என்றும், இது தொடர்பான விவரத்தை சிறப்பு கோர்ட்டில் தெரிவித்து கொள்ள வேண்டியது என்றும் மனுவை தள்ளுபடி செய்தது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in