தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், நடிகர் விஷால் புகார்! தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகவும் நடிகர் விஷால் திட்டம்.

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் மனு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், நடிகர் விஷால் இன்று புகார் மனு அளித்துள்ளார். 

மேலும், வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடமும் முறையிட உள்ளார். 

இங்கு தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நீதி மன்றத்தை அணுகவும் நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளார். 

போகிறப்போக்கைப் பார்த்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com 

 

 

 

Updated: December 6, 2017 10:18 pm — 10:18 pm

Amazing offer for you…

Recent Posts

ullatchithagaval © 2014