இலங்கை கடற்பரப்பில் 10 இந்திய மீனவர்கள் கைது!- கைது செய்யப்படுவது மீனவர்கள் அல்ல; இந்தியாவின் கௌரவம்!

indian fisherman2indian fisherman3

indian fisherman indian fisherman1

இலங்கை  வடக்கு கடற்பகுதியில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று காலை (நவம்பர் 16) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அதன்பின் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

indian fisherman srilanka navy aresst4

நேற்று முன்தினம் (நவம்பர் 15) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்.

இதே பகுதியில் நேற்று முன்தினம் (நவம்பர் 15) 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், மீண்டும் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், பிறகு விடுவிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இது தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் பிரச்சனையாகவும் தொடர்ந்து உருவெடுத்து வருகிறது. இதற்கு என்றுதான் தீர்வு கிடைக்கும்?

நான் இதழியல் துறைக்கு வந்த காலத்திலிருந்து சுமார் 30 ஆண்டுகளாக இப்பிரச்சனை குறித்து எழுதி,  எழுதியே எனக்கே விரக்தியாகிவிட்டது.

இந்தியா – இலங்கைக்கு இடையே உள்ள சர்வதேச கடல் பகுதியில் அப்படி என்னதான் நடக்கிறது?

இந்திய மீனவர்களை எல்லைத்தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இந்திய கடற்படையினரும், இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவாமல் எல்லையில் நின்று தடுக்க வேண்டிய இலங்கை கடற்படையினரும், அங்கு அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?

ஒன்று பணியில் கவனக்குறைவாக இருக்கவேண்டும்; இல்லையென்றால்,  தனிப்பட்ட ஆதாயத்திற்காக கண்டுக்கொள்ளாமல் இருக்கவேண்டும். இதை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

கைது செய்யப்படுவது மீனவர்கள் அல்ல..! இந்தியாவின் கௌரவம் என்பதை, எல்லை தாண்டும் நம் இந்திய மீனவர்களும், இந்தியக் கடலோரக் காவல்படையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை கடற்படையினரிடம் சிக்கி அடிப்பட்டு, மிதிப்பட்டு, அவமானப்பட்டு, அந்நிய நாட்டு சிறையில் நடைப்பிணமாக இருப்பதைவிட, எல்லை தாண்டாமல் பிழைப்பு நடத்தி, கிடைப்பதைக் கொண்டு மானத்தோடும், கௌரவத்தோடும் உயிர் வாழ்வது எவ்வளவோ மேல் என்பதை இந்திய மீனவர்கள் இனியாவது உணரவேண்டும்.

ஏனென்றால், விலை மதிக்க முடியாத உயிரையும், நம் நாட்டின் கௌரவத்தையும் பணையம் வைத்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?

மல்லாந்துப் படுத்துக்கொண்டு கொஞ்சம் மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள்..! இதில் உள்ள உண்மை புரியும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com