ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.

eps1PRESS RELEASE

RAMESWARAM FISHER MANRAMESWARAM FISHER MAN.1

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இந்தியக் கடலோரக் காவல்படையினர் 13-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும், பல மணிநேரம் படகில் வைத்து தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுக்குறித்து 14.11.2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR No.31 / 2017) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் மட்டுமே, நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வந்த நிலையில், இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுக்குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பாதுகாப்புத்துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும். சொந்த நாட்டு மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும். துரதிர்ஷடவசமான இந்த சம்பவம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-கே.பி.சுகுமார்.