குழிக்குள் விழுந்து தவித்த காட்டெருமை!- 10 மணி நேரம் தாமதமாக வந்த வனத்துறையினர்!

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வராயன் குகைக்கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் தோட்டத்தில், கழிவுநீர் தொட்டிக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றில் நேற்று இரவு காட்டெருமை ஒன்று விழுந்தது. இன்று காலை இதை கண்ட அப்பகுதியினர், வனத்துறைக்கு  தகவல் அளித்துள்ளனர்.

ஆனால், தகவல் கிடைத்து 10 மணி நேரம் கழித்து ஏற்காடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதுவரை குழிக்குள் சிக்கி தவித்த காட்டெருமை உயிர் பயத்தில் கத்திக்கொண்டே  இருந்தது.

அதன் பின்னர் வனத்துறையினர் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் வழி ஏற்படுத்தியவுடன், குழிக்குள் சிக்கி தவித்த காட்டெருமை அவ்வழியே ஏறி ஓடியது.

ஏற்காடு மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பல வன விலங்கினங்கள் அழிந்து விட்டன. தற்போது காட்டெருமை எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால், வன உயிரினங்களை இனி வரைப்படத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்.

-நவீன் குமார்.