மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 -வது ஒன்றிய மாநாடு ஏற்காட்டில் நடைப்பெற்றது.

12slmnav04

12slmnav02

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7-வது ஏற்காடு ஒன்றிய மாநாடு ஏற்காடு டவுன் பகுதியில் இன்று காலை நடைப்பெற்றது.

ஏற்காடு பஸ் நிலையத்தில் சின்னம்மா கொடியேற்றினார். பின்னர் அங்கு துவங்கிய பேரணி கடை வீதி, காந்தி பூங்கா, காவல் நிலையம், புனித ஜோசப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளை கடந்து சீரங்கன் நினைவரங்கத்தில் நிறைவடைந்தது.

ஜோதி, குப்புசாமி ஆகியோர் தலைமைக்குழுவாக மாநாட்டை வழிநடத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குழந்தை வேலு துவக்கஉரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் பழனிசாமி வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கை வாசித்தார். மேலும், மாநாட்டில் புதிய ஒன்றிய செயலாளராக நேருவும், 7 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

1.மலைகளில் உள்ள நிலங்களுக்கு பட்டா கொடுப்பதற்கு தடையாக உள்ள ஜி.ஓ.1861-யை ரத்து செய்ய வேண்டும்.

2.ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களும் சுத்தம் செய்யப்பட்டு, கழிவு நீர் ஏரியில் கலக்காமல் வேறு இடத்திற்கு திருப்பிவிடப்பட வேண்டும்.

3.மாரமங்கலம் பஞ்சாயத்து ஆத்துப்பாலம் முதல் கொட்டச்சேடு வரையிலான லூப் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேனாங்குழி காட்டிலிருந்து கொட்டச்சேடு வரை தார்ச்சாலை அமைத்து பஸ் போக்குவரத்து தொடங்கிட வேண்டும்.

4.வேலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட செங்கொடி நகருக்கு பட்டா, மின் வசதி, குடிநீர் வசதி செய்து தரவேண்டும்

5.ஏற்காட்டிலிருந்து கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளிக்கு வந்து செல்வதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

மாநாட்டில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் கிருஷ்ணமூர்த்தி, கண்ணாடிராஜ், குமார், உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.

Updated: November 12, 2017 5:58 pm — 5:58 pm

Amazing offer for you…

Recent Posts

ullatchithagaval © 2014