திமுக தலைவர் மு.கருணாநிதியுடன், நடிகர் சரத்குமார் சந்திப்பு!- அரசியல் சாயம் பூச வேண்டாம்: நடிகர் சரத்குமார் வேண்டுகோள்.

SKR MK MEETSKR MK MEET1

எனக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொடுத்தவர், தனிப்பட்ட முறையில் என்மேலும், என் குடும்பத்தின் மேலும் அன்பு வைத்திருந்தவர் என்பதின் அடிப்படையில், சரத்குமார் என்ற மனிதன், மனிதத்தன்மையுடன் கலைஞரின் உடல் நிலை விசாரிக்க குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

அரசியலுக்கு வந்த பிறகு எந்த ஒரு செயலை செய்தாலும், அரசியல் சாயம் பூசப்படும் சூழல்தான் நமது நாட்டில் நிலவுகிறது.

இரண்டு வாரம் முன்னர் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான இந்த சந்திப்பிற்கு தயவு செய்து அதே சாயம் பூச வேண்டாம். 

தற்போது இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால் இதனை பதிவு செய்கிறேன்.

அரசியல் நாகரிகத்தை அரசியலில் இருக்கும் அனைவரும் கற்றுக் கொள்வோம், கடைப்பிடிப்போம்.

அரசியலில் கொள்கை அடிப்படையில் எதிரெதிராக இருப்பவர்கள் எதிரிகளாக சித்திகரிக்கப்படுவதை மாற்றியமைப்போம்.

இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.

 

Updated: November 12, 2017 4:39 pm — 4:39 pm

Amazing offer for you…

Recent Posts

ullatchithagaval © 2014