மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து!- தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது!- சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்.

Pranab

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை இந்த கல்வியாண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 24-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

IMC-Amendment-Ordinance-2016-24.05.2016IMC-Amendment-Ordinance-2016-24.05.2016 2

pr230516c

இதற்காக பிரதமர் நரேந்திரமோதிக்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

PRESS RELEASE PRESS RELEASE2

இந்நிலையில் நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்து, மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இந்த அவசர சட்டம் சட்ட விரோதமானது என்றும், அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. யார் வழக்கு தொடர்ந்தாலும், தங்களது கருத்தை கேட்க வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் 3 மனுக்களை தமிழக அரசு தாக்கல் செய்தது.

இதனிடையே, சில மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஏதேனும் மனு தாக்கல் செய்யப்பட்டால் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், தங்களை விசாரிக்காமல் அவசர சட்டத்துக்கு தடை எதுவும் விதிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர்

இந்நிலையில், ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறியதோடு, பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுமையாக மறுக்கவில்லை. தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு விலக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் குழப்பம் ஏற்படும். தற்போது தடை விதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது.

இதனால் இந்த அவசர சட்டத்தின்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்தாண்டு மட்டும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு இருக்காது.

-டாக்டர் துரைபெஞ்சமின்

ullatchithagaval@gmail.com