யோகா மகோத்சவம் – சர்வதேச யோகா தினம் 2024 க்கான 75 நாட்கள் கவுண்டவுனின் கோலாகல கொண்டாட்டம் .

சர்வதேச யோகா தினம் 2024 க்கான 75 நாட்கள் கவுண்டவுனைக் கொண்டாடும் வகையில் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் இணைந்து மகாராஷ்டிராவின் புனேவின் வாடியா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்த  ‘யோகா மகோத்சவம்’ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் திரண்டனர். இந்த குறிப்பிடத்தக்க உற்சாகம் மற்றும் பங்கேற்பு, தனிப்பட்ட மற்றும் சமூக மேம்பாட்டை வளர்ப்பதில் யோகாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆயுஷ் அமைச்சகத்தின் துணைத் தலைமை இயக்குநர் திரு சத்யஜித் பால்,  யோகா வித்யா குருகுலம் தலைவர் திரு விஸ்வாஸ் மண்டலிக், ஆயுஷ் அமைச்சகத்தின் இயக்குநர் திருமதி விஜயலட்சுமி பரத்வாஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.  ஆயுஷ் அமைச்சகம், மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் இயக்குநர் தலைமையில் நிபுணர்களால் பொது யோகா நெறிமுறைகள் குறித்த நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட யோகா வல்லுனர்கள் பொது யோகா நெறிமுறைகளை செய்தனர். ஆயுஷ் அமைச்சகம், ஆயுஷ் தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர யோகா நிறுவனங்களின் பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply