புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா! தமிழக எதிர்க்கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கலந்துகொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்.

புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, வரலாற்று சிறப்பு மிக்க விழா. அரசியல் காரணங்களை மனதில் வைத்து பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த விழாவை புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர்களால், அன்று புதிய கட்டிடங்களை திறந்து வைக்கப்பட்டதை எதிர்கட்சிகளால் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. இந்தியாவின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும், உறுதிப்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசும், பிரதமர் அவர்களும், 75-வது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரு முக்கியமான முடிவெடுத்து ஒரு காலக்கெடுவுக்குள், பாராளுமன்ற கட்டிடத்தை எழுப்பி, அவற்றை திறப்பது ஆட்சியாளர்களின் தொலைநோக்கு பார்வைக்கு எடுத்துக்காட்டு. இதனை பிரதமர் திறந்து வைப்பது ஜனநாயகத்திற்கு உட்பட்டது. பாராளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது அல்ல.

இப்புதிய பாராளுமன்ற கட்டிடம், இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மேலவை உறுப்பினர்களுக்கும், தங்கள் தொகுதி மக்களுக்காகவும்,வளர்ச்சிக்காகவும், எந்தவிதமான இடையூறும், சிரமமும் இல்லாமல், நவீன தொலைதொடர்பு மற்றும் வசதிகளுடன் செயல்படுவதற்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

மிக முக்கியமாக, குறிப்பாக தமிழகத்திலிருந்து 75 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய, இந்திய அரசிற்கு கொடுக்கப்பட்ட செங்கோல் என்பது ஆட்சி நேர்மையானதாகவும், நீதி பிறழாமல் அமைய வேண்டும் என்பது பொருட்டே அமைகிறது.

பிரதமா அவர்கள், இந்த செங்கோலை பாராளுமன்றத்தில் வைப்பது என்பது ஆட்சியாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், நாட்டிற்கும், தங்கள் தொகுதி மக்களுக்கும் முறையே பணியாற்ற வேண்டும் என்பதை காட்டுகிறது. செங்கோல் தமிழகத்திற்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்க கூடியது. தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பறைசாற்றுகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தமிழகத்தை சேர்ந்த ஆளும்கட்சியும், அதனைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகளும், அக்கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் சிறப்பு சேர்க்க கூடிய நிலையை பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.

எனவே தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியும், அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும், பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவை புறக்கணிப்பதை தவிர்த்து, இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உயர்பணி ஆற்றக்கூடிய புனித மையமாக விளங்க வேண்டும் என்பதை மனதிலே வைத்து பாராளுமன்ற கட்டிடத் திறப்புவிழாவில் கலந்துகொண்டுப் பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply