கடல் மார்க்கமாக படகு மூலம் கடத்தப்பட்ட 280 கோடி ரூபா மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஹாஷிஸ் போதைப்பொருட்கள் பறிமுதல்!-6 நபர்கள் கைது.

இலங்கை புலனாய்வுப் பிரிவினரும், இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இலங்கையின் தெற்கே டோண்ட்ராவில் இருந்து சுமார் 413 கடல் மைல் தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையில் சுமார் 111 கிலோ மற்றும் 606 கிராம் ஹெராயின் மற்றும் சுமார் 10 கிலோ மற்றும் 254 கிராம் ஹாஷிஸ் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு பிடிபட்டது.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 06 நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு, இரணைவில, ஆண்டிகம மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 29 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 1404
0

Leave a Reply